அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கோனா வெங்கட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகை அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்புராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தமிழில் இந்த திரைப்படம் “நிசப்தம்” என்ற டைட்டிலில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மாதவன் மியூசியனாகவும், அனுஷ்கா ஆர்டிஸ்டாகவும் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தை பார்த்த பலரும் தங்களது ரிவியூஸை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

Share.