சேலையில் அழகு தேவதையாக ‘சூரரைப் போற்று’ ஹீரோயின்… குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. சில மலையாள படங்களில் நடித்திருந்த இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘8 தோட்டாக்கள்’. இந்த படத்தை ஸ்ரீகணேஷ் இயக்க, ஹீரோவாக வெற்றி நடித்திருந்தார்.

இதில் அபர்ணா பாலமுரளி ‘மீரா வாசுதேவன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்கு பிறகு நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘சர்வம் தாள மயம்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ராசு ரஞ்சித்தின் ‘தீதும் நன்றும்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இம்மூன்று படங்களிலுமே நடிகை அபர்ணா பாலமுரளி சூப்பராக நடித்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார்.

அதிலும் குறிப்பாக ‘சூரரைப் போற்று’ படத்தில் ‘பொம்மி’ கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இப்போது அபர்ணா பாலமுரளி நடிப்பில் மலையாளத்தில் ‘உலா, ஆடுஜீவிதம்’, தமிழில் அசோக் செல்வனின் புதிய படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

 

View this post on Instagram

 

A post shared by @anika_weaves

Share.