‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை அபர்ணா தாஸ்!

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அபர்ணா தாஸ். இவர் ‘ஞான் பிரகாஷன், மனோஹரம்’ ஆகிய மலையாள படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அபர்ணா தாஸ் ‘பீஸ்ட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார்.

சமீபத்தில் ரிலீஸான இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்திருந்தார். இதனை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்திருந்தார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது எடுத்த ஸ்டில்ஸை நடிகை அபர்ணா தாஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Share.