அடேங்கப்பா… ‘சர்கார்’ படத்துக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்த ‘தீனா’. ‘தீனா’வின் சக்சஸ், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது.

‘ரமணா’வும் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரின் லிஸ்டில் இடம் பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி, 7ஆம் அறிவு’, ‘தளபதி’ விஜய்யுடன் ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’, ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுடன் ‘ஸ்பைடர்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து மாஸ் காட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதில் ‘சர்கார்’ படத்தில் விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.