இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இப்போது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, நடிகர் விகரமின் ‘கோப்ரா’, நடிகர் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’, நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ என ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Share.