வெளியானது அரபிக் குத்து வீடியோ பாடல் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் .கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

படத்திற்கு முன்பாக வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் 362 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்து உள்ளது . அதனை தொடர்ந்து வெளியான ஜாலி ஓ ஜிம்கானா எனும் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . கு.கார்த்திக் வரிகளில் அனிருத் இசையில் இந்த பாடல் உருவாகி இருக்கிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாலி ஓ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியானது இந்த பாடலை இதுவரை 11 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர் .

இந்நிலையில் அரபிக் குத்து பாடலின் வீடியோ பதிவு இன்று வெளியாகி உள்ளது . நடிகர் விஜய் மற்றும் பூஜா இணைந்து ஆடி உள்ள இந்த பாடலை ஜானி மாஸ்டர் இயக்கி உள்ளார் . ஏற்கனவே வெளியான லிரிக்ஸ் வீடியோ உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ள நிலையில் இந்த வீடியோ பாடலுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள் .விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share.