விரைவில் அரவிந்த் சாமியின் ” கள்ளபார்ட் “

தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் அரவிந்த் சாமி.அதன் பிறகு ரோஜா, என் சுவாசக்காற்றே, பம்பாய் போன்ற படங்கள் மூலம் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர், சினிமாவில் இருந்து சிலகாலமாக விலகி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் மீண்டும் அரவிந்த் சாமி நடிக்கத் தொடங்கினார். ஜெயம் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் இவரது திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் தலைவி படம் வெளியாகி இருந்தது.இவர் நடித்துள்ள ‘ரெண்டகம்’, ‘சதுரங்க வேட்டை 2’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. மேலும் மாநாடு படத்தில் இவர் தான் முதலில் வில்லனாக நடிக்க இருந்தார் ஆனால் தலைவி படத்தின்‌ படப்பிடிப்பின் காரணமாக அதில் நடிக்காமல் போனார்.

தற்போது, ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கள்ளபார்ட்’. இப்படத்தில் ரெஜினா, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூவிங் ஃபிரேம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ‘கள்ளபார்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2019-ஆம் ஆண்டு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.