சரத்குமாருக்கு பதிலாக நடித்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ‘ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன் நடிகராக தமிழில் அறிமுகமான படம் ‘நன்றி’. இந்த படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அர்ஜுனின் 100-வது படம் ‘மன்னவரு சின்னவரு’, 150-வது படம் ‘நிபுணன்’.

‘நிபுணன்’ படத்துக்கு பிறகு ‘லை, நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா, இரும்புத் திரை, கொலைகாரன், குருக்ஷேத்ரா, ஜாக் அண்ட் டேனியல், ஹீரோ’ என பல படங்களில் நடித்து விட்டார் ‘ஆக்ஷன் கிங்’. அர்ஜுன் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ‘சேவகன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை’ போன்ற படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இப்போது அர்ஜுன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஜென்டில் மேன்’. 1993-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக மதுபாலா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது நடிகர் சரத்குமாராம். பின், சில காரணங்களால் சரத்குமாரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.