அடேங்கப்பா… ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தெலுங்கு மொழியில் அமைந்த முதல் படம் ‘நுவ்விலா’. ‘நுவ்விலா’ படத்துக்கு பிறகு ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்ரமண்யம்’ ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்தார் விஜய் தேவரகொண்டா.

அதன் பிறகு ‘பெல்லி சூப்புலு’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தெலுங்கு சினிமா. சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்கு பிறகு ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘துவாரகா, அர்ஜுன் ரெட்டி, ஏ மந்த்ரம் வேசவே, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா’, தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக ‘நடிகையர் திலகம், நோட்டா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என படங்கள் குவிந்தது.

இப்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘லைகர்’. இப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்க, ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்து கொண்டிருக்கிறார். படத்தை வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு ரூ.37 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.