அருள்நிதியின் த்ரில்லர் படமான ‘டைரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. அருள்நிதியின் புதிய படமான ‘டைரி’ இன்று (ஆகஸ்ட் 26-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர்கள் அறிவழகன் மற்றும் அஜய் ஞானமுத்து இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

இந்த படம் க்ரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் ரெடியாகியுள்ளதாம். இதில் ஹீரோயினாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் யோஹான் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.