அருண் விஜய்யை வைத்து ஹரி இயக்கும் படம்… வெளியான செம்ம மாஸ் தகவல்!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.

ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது.

இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஹரி இயக்கும் படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இப்படத்தினை சி.ஜே.ஜெயக்குமார் தனது ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். தற்போது, வருகிற ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பை தொடங்கலாம் என இயக்குநர் ஹரி ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.