அருண் விஜய் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘யானை’… ரிலீஸானது செம மாஸான ஃபர்ஸ்ட் லுக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர்’ மற்றும் இயக்குநர் ஹரி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஹரி இயக்கும் படத்துக்கான ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இப்படத்தினை ‘டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராமச்சந்திர ராஜு, ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி நடித்து வருகின்றனர்.

இப்படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். தற்போது, இந்த படத்துக்கு ‘யானை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அருண் விஜய்யே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸையும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.