மாஃபியா படத்திற்காக அருண் விஜய் வாங்கிய சம்பளம் ?

நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் . முறை மாப்பிள்ளை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் இவர் . இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி இருந்தார் . கவுண்டமணி , செந்தில் , மணிவண்ணன் என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . 1995ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .அதன் பிறகு பிரியம் , காத்திருந்த காதல் , கங்கா , கௌரி என பல படங்களில் நடித்து வந்தார் . நல்ல திறமையான நடிகராக இவர் இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு பெரிதாக வரவேற்பு இவரது ஆரம்ப காலத்தில் கொடுக்கவில்லை . ஆனாலும் இவர் தொடர்ந்து பாண்டவர் பூமி , இயற்கை , மலை மலை , என் நடித்து வந்தார் . அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்கிற படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் .அதன் பிறகு இவருக்கு தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவானது . இப்போ பல படங்களில் நடித்து வருகிறார் . இவர் பல வருடம் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்தார் .

இந்நிலையில் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸில் நடித்து உள்ளார் அருண் விஜய் . இயக்குனர் அறிவழகன் இந்த வெப் சீரிஸை இயக்கி உள்ளார் . இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது


இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியான படம் மாஃபியா . இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார் . ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . இந்த படத்தில் நடிப்பதற்காக அருண் விஜய் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.