அருண் விஜய் – அறிவழகன் காம்போவில் உருவாகியுள்ள ‘பார்டர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், யானை, பார்டர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிவழகன் இயக்கும் ‘பார்டர்’ படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இதில் ஹீரோயினாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளாராம். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். அருண் விஜய்யின் 31-வது படமான ‘பார்டர்’யின் ரிலீஸுக்காக இவரது ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, இந்த படத்தை வருகிற நவம்பர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Share.