தள்ளிப்போன அருண் விஜய் படம்!

2002-ஆம் வெளியான தமிழ் படத்தை இயக்கி கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பிரசாந்த் . இதன் பிறகு சாமி , கோவில் , அருள் ,ஐயா , அருள், தாமிரபரணி , வேல் ,சிங்கம் , என பல படங்களை இயக்கியவர் ஹரி . இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஆறு , வேல் ,சிங்கம் , சிங்கம் 2 , சிங்கம் 3 என ஐந்து படங்கள் இயக்கி உள்ளார் . இந்த ஐந்து படங்களும் மிக பெரிய வெற்றிகளை குவித்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி ஆறாவதாக ஒரு படம் இயக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்தார் . இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் இயக்க தொடங்கினார்.

யானை என்ற தலைப்பை இந்த படத்திற்கு பெயர் வைத்தார் ஹரி. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு , ஆகியோர் இந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி இருக்கிறது . இந்த படம் வருகின்ற மே 6-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது .இந்நிலையில் இந்த படம் சில காரணங்களால் தள்ளி போகி இருக்கிறது.வருகின்ற ஜூன் மாதம் 17-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Share.