அருண் விஜய்யின் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர்’ என நான்கு படங்களும், ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அறிவழகன் இயக்கியுள்ளார்.

இவ்வெப் சீரிஸ் நேற்று (ஆகஸ்ட் 19-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’யில் ரிலீஸானது. இதில் மிக முக்கிய ரோல்களில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோதினி, ஜி.மாரிமுத்து, தருண் குமார், வினோத் சாகர், சரத் ரவி, காக்கா முட்டை ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ், அஜித் ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘AVM புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த வெப் சீரிஸை ‘சோனி லைவ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.