அடேங்கப்பா… 3 நாட்களில் அருண் விஜய்யின் ‘யானை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர், யானை’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘யானை’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இயக்கியுள்ளார்.

இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படத்தினை ‘டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராமச்சந்திர ராஜு, ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.