தனது மனைவியின் பிறந்த நாளில் அருண்ராஜா காமராஜ் செய்த ட்வீட்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அருண்ராஜா காமராஜ். இவர் கனா என்ற படம் படம்
மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த
படத்தை தயாரித்தவர் சிவகார்த்திகேயன் . இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் . இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மேலும் சமீபத்தில் இந்த பட சீனா நாட்டிலும் வெளியாகியது.

இவர் இயக்குனர் ஆவதற்கு முன் நெருப்புடா நெருங்குடா பாப்போம் , வரலாம் வரலாம் வா பைரவா போன்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில பாடல்களையும் இவர் எழுதி உள்ளார். கபாலி படத்தில் இவர் பாடிய நெருப்பு டா நெருங்கு டா பாப்போம் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. தமிழ் திரையுலகில் படி படியாக முன்னேறிக்கொண்டிருந்த அருண்ராஜா விற்கு கொரோனா இரண்டாவது அலை அவரது நிஜ வாழ்க்கையில் எதிர்பார்த்திராத அளவிற்கு துயரை தந்தது. கொரோனா இரண்டாம் அலையில் தனது மனைவியை இழந்தார் அருண் ராஜா காமராஜ்.

இந்நிலையில் அவரது மனைவிக்கு இன்று பிறந்த நாள். அவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உன்னை மிஸ் செய்கிறேன் என்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் அருண் ராஜாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share.