ஷாருக்கானுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான் ஹீரோ. அது தான் ‘தளபதி’. இதில் அரவிந்த் சாமி ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தளபதி’ படத்துக்கு பிறகு ‘ரோஜா’ என்ற படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோ அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தார் இயக்குநர் மணிரத்னம்.

‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாலாட்டு, மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி’ என தமிழ் படங்கள் குவிந்தது. அரவிந்த் சாமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அரவிந்த சாமியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அலைபாயுதே’. 2000-யில் ரிலீஸான இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். படத்தில் அரவிந்த் சாமி நடித்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தானாம். பின், சில காரணங்களால் ஷாருக்கானால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.