அரவிந்த் சாமியின் அடுத்த படம் கள்ளபார்ட் !

தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அரவிந்த்சாமி . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தலைவி . இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கள்ளபார்ட். இந்த படத்தில் அரவிந்த்சாமி , ரெஜினா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறடி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கி உள்ளார் .நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம்.ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்தை இதில் பார்க்கலாம் படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் மேலும் படம் மே மாதம் வெளியாக உள்ளது என்றும் தெரிவித்தார் .

Share.