தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘நரகாசூரன்’ டீம்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன், தலைவி’ என ஆறு படங்களும், ‘நவரசா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘நவரசா’ வெப் சீரிஸில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘ப்ராஜெக்ட் அக்னி’ என்ற குறும்படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து பிரசன்னா, பூர்ணா நடித்துள்ளனர்.

இவ்வெப் சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் – நடிகர் அரவிந்த் சாமி காம்போவில் உருவாகி பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருந்த ‘நரகாசூரன்’ படத்துக்கும் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா, கிட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Share.