நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் பெயர் என்ன தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. ஆர்யாவுக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அறிந்தும் அறியாமலும்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் நவ்தீப், பிரகாஷ் ராஜ், சமிக்ஷா நடித்திருந்தனர்.

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஆர்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், ஓரம்போ, நான் கடவுள், சர்வம், மதராசபட்டினம், பாஸ் (எ) பாஸ்கரன், சிக்கு புக்கு, அவன் இவன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம், மீகாமன், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், கடம்பன், கஜினிகாந்த், மகாமுனி, காப்பான், டெடி, சார்பட்டா பரம்பரை’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ஆர்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. சமீபத்தில், ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது, இக்குழந்தைக்கு ‘அரியனா’ (ARIANA) என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Share.