விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண ஆர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. ஆர்யாவுக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அறிந்தும் அறியாமலும்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் நவ்தீப், பிரகாஷ் ராஜ், சமிக்ஷா நடித்திருந்தனர்.

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஆர்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. ஆர்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில், ஆர்யா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2012-யில் ரிலீஸான தமிழ் படம் ‘நண்பன்’. ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் ஜீவா நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது ஆர்யா தானாம். பின், சில காரணங்களால் ஆர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.