எனிமி படத்தில் நடிக்க ஆர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

எனிமி 2021 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்கி இருந்தார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பின் கீழ் இந்த படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் விஷால், ஆர்யா, மிர்னாலினி ரவி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நடிகர் ஆர்யா மற்றும் விஷால் கோலிவுட்டில் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர் . இதனால் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடன் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . ஆனால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை .

இந்த படம் நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் இந்த படத்தில் இடம்பெற்ற ” டம் டம் ” பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது . இதனால் நடிகை மிர்னாலினி ரவிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது .

இந்நிலையில் நடிகர் ஆர்யா இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 4 கோடி ரூபாய் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது .

Share.