‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் ஆர்யா… வைரலாகும் ஸ்டில்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. ஆர்யாவின் ரசிகர்கள் இவரின் ‘டெடி’ படத்தின் ரிலீஸுக்காக பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படத்தை கடந்த மார்ச் 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்தனர்.

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷாவே நடித்திருந்தார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் கருணாகரன், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால், மசூம் ஷங்கர், கருணாகரன், சதீஷ் முக்கிய ரோல்களில் நடித்திருந்தார்கள்.

Arya Takes First Dose Of Covid 19 Vaccine1

இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எனிமி’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார், ‘அரண்மனை 3’ படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்நிலையில், இன்று நடிகர் ஆர்யா ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Share.