அக்டோபர் 14-ஆம் தேதி ஆர்யாவுடன் மோதப்போகும் சசிகுமார்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய், உடன் பிறப்பே’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ராஜவம்சம்’ என்ற படத்தை கதிர்வேலு இயக்க, ‘செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் கதையின் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்தனர். பல மாதங்களாக சசிகுமாரின் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நாளில் ஆர்யாவின் ‘அரண்மனை 3’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.