அடேங்கப்பா… ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கேப்டன்’. இந்த படம் நேற்று (செப்டம்பர் 8-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், ராஜ் பரத், மாளவிகா அவினாஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்துள்ளார், எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘தி ஷோ பீப்பிள் – திங்க் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் உலக அளவில் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.