ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

இப்போது பா.இரஞ்சித் இயக்கியுள்ள புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சூப்பரான வீடியோவை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்திருந்தார்.

தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ட்ரெய்லர் இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வருகிற ஜூலை 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

1

2

Share.