மார்ச் 12-ஆம் தேதி OTT-யில் ‘டெடி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘டெடி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் ஆர்யா. இப்படத்தை இந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகர் ஆர்யாவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷாவே நடித்திருக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் சூப்பரான ட்ரெய்லரை இன்று (பிப்ரவரி 23-ஆம் தேதி) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.