குழந்தைகளை கவர்ந்த ஆர்யாவின் ‘டெடி’… வெளியானது VFX BREAKDOWN வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. ஆர்யாவின் ரசிகர்கள் இவரின் ‘டெடி’ படத்தின் ரிலீஸுக்காக பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படத்தை கடந்த மார்ச் 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்தனர். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷாவே நடித்திருக்கிறார்.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால், மசூம் ஷங்கர், கருணாகரன், சதீஷ் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ஆர்யாவின் ரசிகர்கள் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் குழந்தைகளை கவர்ந்ததற்கு காரணம், படத்தில் வலம் வந்த டெடி பொம்மை தான். தற்போது, அந்த டெடி பொம்மை வரும் காட்சிகளின் VFX BREAKDOWN வீடியோவை ஆர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

Share.