ஹாரர் படமான ‘பீட்சா 3 : தி மம்மி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகி கொண்டிருக்கிறது. அது தான் தமிழ் படமான ‘பீட்சா 3 : தி மம்மி’. ஹாரர் படமான இதில் முக்கிய ரோல்களில் அஷ்வின், பவித்ரா மாரிமுத்து, கெளரவ் நாராயணன், அபிஷேக் ஷங்கர், காளி வெங்கட், அனுப்பமா குமார், ரவீனா, யோகி, சுபிக்ஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை மோகன் கோவிந்த் இயக்கி வருகிறார்.

‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் சி.வி.குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். அஷ்வின் ஹேமந்த் இசையமைத்து வரும் இதற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்று (அக்டோபர் 16-ஆம் தேதி) இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.