வெளியானது அஸ்வின் குமாரின் முதல் பார்வை !

1999-வது ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன் . இந்த படத்தை தொடர்ந்து கிங் , கொக்கி ,லீ , லாடம் என் அடுத்து அடுத்து படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவரை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற படம் மைனா.

2010-ஆம் ஆண்டு வெளியான மைனா மிகப்பெரிய வெற்றியை பெற்றது . விதார்த் நாயகனாகவும் , அமலா பால் நாயகியாகவும் நடித்து இருந்தனர் . இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . மைனா படத்திற்கு பிறகு கும்கி என்கிற படத்தை இயக்கினார் பிரபு சாலமன் . அந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகியாக நடிகை லட்சுமி அறிமுகமானார் .இந்த படத்திற்கும் இமான் இசையமைத்து இருந்தார் .
இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது படமும் நல்ல வரவேற்பை பெற்றது .

இதனை தொடர்ந்து கயல் , தொடரி ,காடன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார் பிரபு சாலமன். இதில் கயல் படம் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது .இந்நிலையில் பிரபு சாலமன் தற்பொழுது குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் குமாரை வைத்து படம் இயக்கி வருகிறார் . அந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி இருக்கிறது . நிவாஸ் .கே . பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

முதல் பார்வையை நடிகர் அஸ்வின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் . மேலும் இறைவனுக்கு நன்றி மற்றும் என் மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் .

Share.