அஸ்வின் குமாரின் செம்பி டிரெய்லர் வெளியானது !

2010 – ஆம் ஆண்டு வெளியான மைனா‌ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன் .கும்கி ,கயல் போன்ற பல சிறந்த படங்களை கோலிவுட் உலகிற்கு கொடுத்தவர்.இவர் தற்போது “செம்பி ” என்கிற படத்தை இயக்கி உள்ளார்.கோவை சரளா , அஸ்வின் குமார் ,தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்பபடத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.சமீபத்தில் “செம்பி” படத்தின் முதல் பார்வை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து இருந்தது.

இந்நிலையில் செம்பி படத்தின் டிரெய்லரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.