அடேங்கப்பா… அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் ‘குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ், Trigger, நிறங்கள் மூன்று’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘குருதி ஆட்டம்’ படம் நேற்று (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதாரவி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அணில் க்ரிஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்,

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் உலக அளவில் ரூ.85 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.