இவர் தான் என்னுடைய க்ரஷ் !

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் . 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் . இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார். காதலன் , இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் என அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளார் . இந்த படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருக்கிறார் . விருமன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது .

விருமன் படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த பாடலை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்.ஜே.சூர்யா அதிதி ஷங்கரை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் அதிதி ஷங்கரிடம் க்ரஷ் யார் எனக் கேட்டதற்கு அவர் தமிழ் ஹீரோக்கள் யார் பெயரையும் சொல்லாமல் கன்னட நடிகர் யஷ் தான் தன்னுடைய க்ரஷ் என கூறியுள்ளார்.

கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு நடிகர் யஷ் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.