ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடிக்கும் படம்.. இன்னும் அந்த விஷயத்தை மட்டும் அட்லி முடிவு பண்ணலையாமே!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது.

‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்தை அடுத்து அட்லியின் சாய்ஸ் எந்த கோலிவுட் ஹீரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த முறையும் ஒரு டாப் ஹீரோ தான் அட்லியின் சாய்ஸாக இருந்தது. அதோடு ஒரு ட்விஸ்ட்டும் வைத்தார். இந்த முறை பாலிவுட் படத்துக்காக அங்குள்ள டாப் ஹீரோவை டிக் அடித்திருக்கிறார் அட்லி.

அவர் தான் ஷாருக்கான். இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் டைட்டில் ‘சங்கி’ (Sanki) என்று சொல்லப்படுகிறது. தற்போது, டைட்டில் தொடர்பாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்கையில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. அட்லி இன்னும் டைட்டிலை முடிவு செய்யவில்லை” என்று கூறியுள்ளனர்.

Share.