அட்லி இயக்கும் ஷாருக்கான் படம்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது.

‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது. ‘பிகில்’ படத்தை அடுத்து அட்லியின் சாய்ஸ் எந்த கோலிவுட் ஹீரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த முறையும் ஒரு டாப் ஹீரோ தான் அட்லியின் சாய்ஸாக இருந்தது. அதோடு ஒரு ட்விஸ்ட்டும் வைத்தார். இந்த முறை பாலிவுட் படத்துக்காக அங்குள்ள டாப் ஹீரோவை டிக் அடித்திருக்கிறார் அட்லி. அவர் தான் ஷாருக்கான்.

Atlee Shahrukh Khan Film Musical Update1

இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். இப்போது இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) இறுதியில் ஆரம்பிக்க அட்லி ப்ளான் போட்டுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதில் ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒரு சூப்பரான பாடலை பாட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.