சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன அட்லீ !என்ன கரணம் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் .சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாக்டர் . இந்த படத்தை தொடர்ந்து டான் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் . இயக்குனர் கவுதம் வாசுதேவ் இந்த படத்தில் சிறப்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது . டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .

இந்நிலையில் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் படத்தை பார்த்த பலரும் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர் . படத்தில் நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குனர் அட்லீயின் துணை இயக்குனராக இருந்தவர் .

டான் படத்தை பார்த்த இயக்குனர் அட்லீ , நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பை பாராட்டி உள்ளார் மேலும் புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார் மேலும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் . இதற்கு பதில் அளித்துள்ள இயக்குனர் சிபி “ரொம்ப நன்றி குருவே , உங்களது பாராட்டு எனக்கு தந்து இருக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார் .

ஏற்கனவே இயக்குனர் அட்லீயின் துணை இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற வெற்றி படத்தை கொடுத்தார் தற்பொழுது அட்லீயின் மற்றொரு துணை இயக்குனர் டான் என்கிற வெற்றி படத்தை கொடுத்துள்ளார் .

Share.