அவன் இவன்’ பட நடிகர் ராமராஜ் காலமானார்

விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அவன் இவன்’. நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . நடிகை ஜனனி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .படம் வெளியாகி இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றவர் ராமராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்தார்.

இந்நிலையில் 72 வயதாகும் இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இழப்பு சினிமா துறைக்கு பேரிழப்பு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share.