அடேங்கப்பா… ‘பாகுபலி’ வில்லன் ராணா டகுபதியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராணா டகுபதி. ராணாவுக்கு முதல் தெலுங்கு படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அது தான் ‘லீடர்’. ‘லீடர்’-க்கு பிறகு ஹிந்தியில் ‘தம் மாரோ தம்’யில் நடித்தார். பின், தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த ராணா டகுபதி தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார்.

தமிழில் முதல் படமே ‘ஆரம்பம்’. இதில் ‘தல’ அஜித்துக்கு நண்பராக வலம் வந்து அப்ளாஸ் வாங்கினார் ராணா டகுபதி. ‘ஆரம்பம்’ படத்துக்கு பிறகு நடிகர் ராணா டகுபதிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ்/தெலுங்கில் ‘பாகுபலி’ பார்ட் 1 மற்றும் 2, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘காஸி’, தமிழில் ‘பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘காடன்’ (ஹிந்தி / தெலுங்கு / தமிழ்) என படங்கள் குவிந்தது.

இப்போது நடிகர் ராணா டகுபதி நடிப்பில் தெலுங்கு மொழியில் ‘1945, விரத பருவம், பீம்லா நாயக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராணா டகுபதி. இந்நிலையில், நடிகர் ராணா டகுபதியின் சொத்து மதிப்பு ரூ.142 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.