‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பேச்சுலர்’ ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யபாரதி. இவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘பேச்சுலர்’. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வக்குமார் இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் திவ்யபாரதி தனது நடிப்பால் ரசிகர்களை அதிக லைக்ஸ் போட வைத்திருந்தார். ஆகையால், இப்போதே இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

திவ்யபாரதி நடிக்கும் புதிய படம் ‘மதில் மேல் காதல்’. இந்த படத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 3-யின் வின்னர் முகேன் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘புஷ்பா’ என்ற படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் திவ்யபாரதி.

Share.