‘பிக் பாஸ் அல்டிமேட்’டின் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பின், கமல் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியானதால் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சினேகன், தாமரைச் செல்வி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, நிரூப் ஆகிய 14 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வைல்ட் கார்டு மூலம் சதீஷ் குமார் மற்றும் ரம்யா பாண்டியன் என்ட்ரியானார்கள். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10-ஆம் தேதி) பாலாஜி முருகதாஸ் தான் டைட்டில் வின்னர் என்றும், நிரூப் ரன்னர் அப் என்றும் நடிகர் சிலம்பரசன் அறிவித்தார். இதனால் பாலாஜி முருகதாஸின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள்.

Share.