“இந்த வீட்ல எது பண்ணாலுமே தப்பா?”… ஆரியால் தனியாக புலம்பும் பாலாஜி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் பாலாஜி முருகதாஸ் கேமரா முன்பு “அவர்ட கெஞ்சி கூப்டோம். வாங்க பிரதர் இங்க விளையாடலாம்னு. சுத்தி நின்னு நீ அந்த property-யை போட்டிருக்க கூடாது. ஓடி புடிச்சு விளையாடுறது தான் கேம். இல்ல கமல் சார் வந்து கேட்டாரு நான் accept பண்ணிக்குறேன் தப்பு பண்ணேன்னு. இந்த வீட்ல எது பண்ணாலுமே தப்புன்னு சொன்னா எப்படி? அவர் ஆம்பள பையன்னு கேட்டது தப்பு. கேட்காதீங்கன்னு யாராவது சொன்னாங்களா? யாருக்குதான் கோபம் வராது. ஆம்பள பையன் தான நீ விளையாட முடியாதான்னு கேட்டா” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.