கரூர் மாவட்டத்தில் பீஸ்ட் படம் வெளியாகாது ? என்ன காரணம் தெரியுமா ?

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கிற படம் பீஸ்ட் . உலக முழுக்க பல நாடுகளில் இந்த படம் வெளியாகிறது.தமிழ்நாட்டில் மட்டும் 1200 ஸ்கிரீன்களில் இந்தப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்பதிவு பல இடங்களில் விருவிருப்பாக நடைப்பெற்றது. முதல் நாளிலே பல கோடி வசுல் செய்து சாதனை புரியம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தின் வினியோகஸ்தர்களுக்கும் இன்னும் ஒப்பந்தம் கையொப்பம் இடவில்லை . இதனால் கரூர் மாவட்டத்தில் பீஸ்ட் வெளியாகாது என்று கூறப்படுகிறது.

மேலும் கரூர் புறநகர் பகுதிகளான குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் மட்டும் இரண்டு திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

கரூர்‌ மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பீஸட் படம் வெளியாகாத காரணத்தால் இது படத்தின் வசூலை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

Share.