சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.
ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது.
இப்போது பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ (தமிழ்/தெலுங்கு/ ஹிந்தி / மலையாளம்), ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ (தெலுங்கு), ‘ஆச்சார்யா’ (தெலுங்கு), ‘பீஸ்ட்’ (தமிழ்), ‘சர்கஸ்’ (ஹிந்தி) என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
1
2
View this post on Instagram
View this post on Instagram
Comments