‘தளபதி’ விஜய் குறித்து ‘பீஸ்ட்’ ஹீரோயின் போட்ட ட்வீட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.

ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது.

இப்போது பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ (தமிழ்/தெலுங்கு/ஹிந்தி/மலையாளம்), ‘ஆச்சார்யா’ (தெலுங்கு), ‘பீஸ்ட்’ (தமிழ்), ‘சர்கஸ்’ (ஹிந்தி) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “விஜய் சார் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பூஜா ஹெக்டே “ஒரு வார்த்தையில் பதில் சொல்வது கஷ்டம். இருப்பினும் நான் முயற்சி செய்கிறேன். விஜய் சார் இனிமையானவர்” என்று பதில் அளித்துள்ளார்.

Share.