இரட்டை வேடத்தில் நடிக்கும் பாவனா !

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான படம் சித்திரம் பேசுதடி . இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் நடிகை பாவனா . இந்த படத்திற்காக சில விருதுகளையும் வென்றார் நடிகை பாவனா .அதன் பிறகு வெயில் , தீபாவளி , கூடல் நகர் , ஆர்யா போன்ற படங்களில் நடித்து இருந்தார் . தெலுங்கு , மலையாளம் , கன்னட என பல மொழிகளில் நடித்து இருக்கிறார் .கன்னடத் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துள்ளார் இவர் .

தற்பொழுது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை .ஆனால் கன்னட படங்களில் நடித்து வருகிறார் . அந்த வகையில் பிங்க் நோட் என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது .

இந்நிலையில் பிங்க் நோட் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .ஐடன்டிகல் ட்வின்ஸ் கதாபாத்திரங்களில் பாவனா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த படத்தை ஜி.என் ருத்ரேஷ் என்பவர் இயக்கி வருகிறார் .

இந்த படமில்லாமல் ஒரு மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் பாவனா . தமிழிலும் இவர் மீண்டும் படம் நடிக்க வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் ஆசையாய் இருக்கிறது .

Share.