‘பிக் பாஸ்’ சீசன் 4… எந்த தேதியிலிருந்து துவங்கப்போகுது தெரியுமா?

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. வெகு விரைவில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் துவங்கவுள்ளதாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான முதல் ப்ரோமோவை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த முதல் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. தற்போது, இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கும் என தகவல் கிடைத்துள்ளது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.