டாப் ஹீரோவின் படம்… ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் ஓவர் அட்ராசிட்டி செய்யும் நடிகை

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அந்த நடிகை. இவருக்கு முதல் பட வாய்ப்பு அமைந்ததே தமிழ் சினிமாவில் தான். சூப்பர் ஹீரோ படமான இது ஹிட் ஆகாமல் போனதால் அந்த நடிகையின் கால்ஷீட் டைரியில் புதிய தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.

பின், அந்த நடிகைக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம்பிடிக்க வழிவகுத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் ஒரு படமும், தெலுங்கில் மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், மீண்டும் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க கமிட்டானார் அந்த நடிகை. இந்த படத்தில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வதையே அந்த நடிகை வேலையாக வைத்திருக்கிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கென தனியே அதிக பாடிகார்ட்கள் வலம் வருவதால், அவர்களுக்கே அதிக சம்பளம் கொடுக்கிறார்களாம். தமிழில் பட வாய்ப்பே இல்லாமல் இருந்த இந்த நடிகையை, ஏன் இப்படத்தில் கமிட் செய்தோம்? என படக்குழு புலம்பி வருகிறதாம்.

Share.