லெஜெண்ட் படத்தை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள் !

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார் . அந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் . இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி இருந்தது . மேலும் படத்தின் முதல் பாடல் மோசலு மொசுலு என்கிற பாடல் வெளியாகி இருந்தது .அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது .

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடிவாசல்’ பாடல் என்கிற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது .பிரமாண்ட முறையில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது . வாடிவாசல் பாடலை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . சரவணன் அருள் சண்டைக்காட்சிகளில் அனைவரையும் மிரட்டி உள்ளார் . ஷங்கர் படத்திற்கு இணையாக பிரமாண்டமாய் இந்த படம் காணப்படுகிறது . மேலும் இந்த படத்திற்கு நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமன்னா , ஹன்சிகா என பல தென்னிந்தியா சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டார்கள் .

இந்நிலையில் லெஜெண்ட் படத்தின் வெளியீட்டு உரிமத்தை பெற இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு இருக்கின்றன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மதுரை அன்புவின் கோபுரம் சினிமா நிறுவனமும் , பிரபல தயாரிப்பு நிறுவனமாகிய ஏ .ஜி .ஸ் நிறுவனமும் லெஜெண்ட் படத்தை வாங்க தீவிரம் காட்டிவருகிறார்கள் என்ற செய்தி தற்பொழுது வெளியாகி இருக்கிறது . லெஜெண்ட் படத்தின் வியாபார போட்டிக்கு காரணம் பிரம்மாண்டம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள் .

Share.